New Post
நறுமண பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு முகாம்
Excel Agroமத்திய அரசு நிறுவனமான மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு (CSIR–Central Institute Of Medicinal And Aromatic Plants) அவர்கள் நடத்திய நறுமண பயிர்கள் சாகுபடி, நறுமண எண்ணெய் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த விழிப்புணர்வு முகாம் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 26/01/2025 அன்று நடைபெற்றது. இதில் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் அவர்களுக்கு CSIR- CIMAP நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி திரு.சுந்தரேசன் அவர்கள் வெட்டிவேர் பயிர் சாகுபடி குறித்த முக்கியத்துவத்தையும், நறுமண மற்றும் மருத்துவ பயிர்கள் குறித்த விளக்கத்தையும் அளித்தார். இவ்விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட Excel குழும நிறுவனத் தலைவர் திரு முருகானந்தம் அவர்கள் பேசுகையில் "Excel குழுமத்தின் ஒரு அங்கமான Excel Agro நிறுவனம், இந்த மருத்துவ மற்றும் நறுமண பயிர் சாகுபடியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக வெட்டிவேர் பயிர் சாகுபடி, அதிலிருந்து எண்ணெய் எடுத்தல் மற்றும் வெட்டிவேரின் மதிப்பு கூட்டல் பயன்பாடு ஆகியவற்றில் Excel Agro கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகள் வெட்டிவேர் பயிர் செய்ய முன்வரும்பொழுது, அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் Excel Agro செய்யும், அதேபோல் Buy -back செய்து கொள்வதற்கு Excel Agro நிறுவனம் தயாராக இருக்கிறது", என்பதையும் தெரிவித்தார் இந்த நிகழ்வில் மற்றும் வெட்டிவேர் பயிர் சாகுபடி குறித்த விளக்கத்தை திரு பாண்டியன் அவர்களும் எடுத்துரைத்தார்.
Categories

Logistics
We are a Multimodal Operator providing One-Stop Solutions for a whole range of EXIM services.

Powering Tomorrow
Safety for the Environment | Availability of the Energy Source | Inexhaustibility of the Energy Source.